LATEST NEWS
“தேர்தல் விதிமுறையை மீறிய உதயநிதி..” மீண்டும் பாயந்த அதிரடி வழக்குப்பதிவு.. தமிழக அரசியலில் அடுத்த அதிரடி ட்விஸ்ட்..!!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, தேர்தல் நடத்தை விதிகளை மீறி சிறுவனைப் பிரசாரத்தில் ஈடுபடுத்தியதாகத் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மீது தாராபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தாராபுரத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்துப் பிரசாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், சிறுவன் ஒருவனைத் தனது பிரசார வாகனத்தில் ஏற்றி மைக் கொடுத்துப் பேச வைத்துள்ளார். அந்தச் சிறுவன் தமிழக முதலமைச்சர் விஜய்யை விமர்சித்துப் பேசியதோடு, திமுகவுக்கு வாக்குச் சேகரிக்கும் வகையிலும் பேசியுள்ளார்.
இந்த விடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தினர் மற்றும் பல்வேறு தரப்பினர் இதற்குத் தங்களது கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, தேர்தல் தொடர்பான எந்தவொரு நடவடிக்கைகளிலும் குழந்தைகளையோ அல்லது சிறுவர்களையோ ஈடுபடுத்தக் கூடாது என்ற கண்டிப்பான உத்தரவு அமலில் உள்ளது. இந்த நடத்தை விதியை உதயநிதி ஸ்டாலின் மீறிவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தாராபுரம் நகரப் போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
