ஜெம் கிரானைட் வீரமணி தப்பியது எப்படி..? யார் யாருக்கு பணம் கைமாறியது..? மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் நிர்மல்குமார் கேள்வி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஜெம் கிரானைட் வீரமணி தப்பியது எப்படி..? யார் யாருக்கு பணம் கைமாறியது..? மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் நிர்மல்குமார் கேள்வி..!!

Published

on

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் ஜெம் கிரானைட் வீரமணி பாலியல் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பியது எப்படி என்று, முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு தமிழக அமைச்சர் நிர்மல்குமார் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் இருந்தும், அப்போதைய திமுக அரசு ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தொழிலதிபர் ஜெம் கிரானைட் வீரமணி, மு.க.ஸ்டாலினுக்கு நன்கு தெரிந்தவர் என்பதால் இந்த விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இருந்திருக்கலாம் என்று அமைச்சர் நிர்மல்குமார் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், சட்டம் ஒழுங்கு முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தபோதே, யார் யாரிடம் பணம் பெற்றுக்கொண்டு குற்றவாளிகளைத் தப்பிக்க விட்டார்கள் என்பது குறித்து மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

தற்போது தமிழகத்தில் தவெக ஆட்சியில் முதலமைச்சர் விஜய் தலைமையில் காவல்துறை புதிய தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், இந்த அரசு யாருக்கும் ஆதரவாகச் செயல்படாது என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in