“திருடன் திருடன்..!” வேலை முடிந்து திரும்பிய இளம் பெண்.. கண் இமைக்கும் நேரத்தில் மர்ம நபர் செய்த பகீர் காரியம்…. வைரலாகும் ஷாக்கிங் சிசிடிவி..!! – cinefeeds
Connect with us

CRIME

“திருடன் திருடன்..!” வேலை முடிந்து திரும்பிய இளம் பெண்.. கண் இமைக்கும் நேரத்தில் மர்ம நபர் செய்த பகீர் காரியம்…. வைரலாகும் ஷாக்கிங் சிசிடிவி..!!

Published

on

ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில், வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த சுமன் குமாரி என்ற இளம் பெண்ணிடமிருந்து மர்ம நபர் நள்ளிரவில் மொபைல் போனைப் பறித்துக் கொண்டு தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜவஹர் நகர் சாலை எண் 15-ல் வசிக்கும் சுமன் குமாரி, பிரம்மா பாத் பகுதி அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத வழிப்பறி கொள்ளையர் பைக்கில் வந்து அவரது கையில் இருந்த மொபைல் போனை கண் இமைக்கும் நேரத்தில் வலுக்கட்டாயமாகப் பறித்துக் கொண்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் உடனடியாக திருடன் திருடன் என சத்தமிட்டுள்ளார்.

அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு அந்த இடத்திற்கு அக்கம் பக்கத்தினர் மற்றும் உள்ளூர் மக்கள் ஓடிவந்து கொள்ளையர்களைப் பிடிக்க முயன்றனர்; ஆனால் அதற்குள் அந்தப் போதை ஆசாமிகள் அங்கிருந்து வேகமாகத் தப்பியோடிவிட்டனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த ஜாம்ஷெட்பூர் போலீஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்து வரும் போலீஸார், இளம் பெண்ணிடம் அராஜகம் செய்த அந்த மர்ம நபரை வலைவீசித் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in