CRIME
“அடக் கடவுளே.. 2.5 வயது இரட்டை குழந்தைகள் அலற..” சாப்ட்வேர் பெண் ஊழியர் எடுத்த விபரீத முடிவு.. கணவர் வீட்டில் இருக்கும்போதே நடந்த கொடூரம்.. திடுக்கிடும் பின்னணி..!!
ஹைதராபாத் போச்சாரம் பகுதியில் உள்ள சமஸ்கிருதி டவுன்ஷிப் குடியிருப்பில், சந்தோஷி என்ற சாப்ட்வேர் பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீகாகுளம் மாவட்டம் இச்சாபுரத்தைச் சேர்ந்த இவர், கேலக்ஸி டவர்ஸில் உள்ள ஆக்சிஸ் வங்கியில் பணிபுரிந்து வந்தார். விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ரமாகாந்த் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்ட சந்தோஷிக்கு, 2.5 வயதில் இரட்டை குழந்தைகள் உள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் நடந்தபோது அவரது கணவர் வீட்டிலேயே இருந்துள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த பணிப்பெண் பார்த்தபோதுதான், சந்தோஷி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
சந்தோஷியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், அவரது கணவர் ரமாகாந்தின் வரதட்சணை மற்றும் குடும்பத் துன்புறுத்தல் காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்ததாகப் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், கணவரிடம் விசாரணை நடத்தி வருவதுடன், இது தற்கொலையா அல்லது தற்கொலைக்குத் தூண்டப்பட்டதா என்ற பல கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
