LATEST NEWS
“அடடே.. என்ன ஒரு சுகம்..!” சலூனுக்குள் நுழைந்து குரங்கு செய்த அலப்பறையை நீங்களே பாருங்க.. இணையத்தைக் கலக்கும் வேற லெவல் கூத்து..!!
சலூன் கடை ஒன்றுக்குள் சாதாரணமாக நடந்து வந்த குரங்கு ஒன்று, அங்குள்ள நாற்காலியில் அமர்ந்து மனிதர்களைப் போல நிதானமாக மசாஜ் செய்துகொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி நெட்டிசன்களைப் பெருமளவில் கவர்ந்து வருகிறது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வேடிக்கையான வீடியோவில், சலூன் நாற்காலியில் அமர்ந்திருக்கும் குரங்கிற்கு அங்கிருந்த ஊழியர் ஒருவர் மிகவும் மென்மையாகத் தலை மற்றும் உடம்பில் மசாஜ் செய்து விடுகிறார். அந்த இடத்தை விட்டு ஓடவோ அல்லது எதிர்க்கவோ செய்யாமல், ஒரு வழக்கமான வாடிக்கையாளரைப் போல அது அமைதியாக அமர்ந்திருப்பது பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மசாஜ் செய்யும் போது ஒருகட்டத்தில் அந்தக் குரங்கு தனது கண்களை மூடிக்கொண்டு, மசாஜை முழுமையாக ரசித்து அனுபவிக்கும் காட்சிகள் அச்சு அசலாக மனிதர்கள் சலூனுக்குச் செல்வதைப் போலவே உள்ளது. இந்தச் சம்பவம் எங்கு நடந்தது என்ற துல்லியமான விபரம் தெரியவில்லை என்றாலும், இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பார்த்த நெட்டிசன்கள் அந்தக் குரங்கை “விஐபி கஸ்டமர்” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டுத் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
