CRIME
“நான் சாகப் போறேன்..” நள்ளிரவில் இளம்பெண்ணுக்கு வீடியோ கால்.. 35 வயது கான்ஸ்டபிள் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்..!!!
ஹைதராபாத் மூசாராம்பாக் பகுதியில் உள்ள சாலிவாஹன நகரில், முட்டே சந்திரசேகர் (35) என்ற போலீஸ் காவலர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம்பர்ஸ்பேட் தலைமையகத்தில் காவலர் எழுத்தாளராக பணிபுரிந்து வந்த சந்திரசேகர், நள்ளிரவில் இளம்பெண் ஒருவருக்கு வாட்ஸ்அப் வீடியோ கால் செய்துள்ளார். அந்த வீடியோ காலில், தான் இப்போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அந்தப் பெண்ணிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், உடனடியாக சைதன்யபுரி காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
சைதன்யபுரி போலீஸார் இந்தத் தகவலை உடனடியாக மால்காஜ்கிரி போலீஸாருக்கு மாற்றியுள்ளனர். தகவலறிந்து மால்காஜ்கிரி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்வதற்குள் காவலர் சந்திரசேகர் உயிரிழந்திருந்தார். இதையடுத்து அவரது உடலைக் கைப்பற்றிய போலீஸார், வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். நள்ளிரவில் அவர் வீடியோ கால் செய்த அந்த இளம்பெண் யார், குடும்பப் பிரச்சனையா அல்லது பணிச்சுமையா என காவலரின் இந்த விபரீத முடிவின் பின்னணியில் உள்ள முழுமையான காரணங்கள் குறித்து போலீஸார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
