CRIME
“உல்லாசமாக இருக்க வரியா..?” மனைவியிடம் வாலிபர் கேட்ட ஒற்றை கேள்வி.. 5 ஆண்டுகள் காத்திருந்து கணவன் தீர்த்த கொடூர பழி.. குலை நடுங்க வைக்கும் சம்பவம்..!!
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே, தனது மனைவிக்கு ஆபாசத் தொந்தரவு கொடுத்த வாலிபரை 5 ஆண்டுகள் கழித்துப் பழிதீர்க்கும் விதமாக, கறி விருந்து வைப்பதாகக் கூறி மதுபோதையில் அடித்துக் கொலை செய்து குளத்தில் வீசிய சிவில் இன்ஜினியர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பூதப்பாண்டி அருகே திட்டுவிளை பகுதியைச் சேர்ந்த ஆல்பின் ராஜேஷ் (31) என்ற கொத்தனார், காடேற்றி குளத்தில் அரை நிர்வாண சடலமாக மீட்கப்பட்டார். போலீஸாரின் தீவிர விசாரணையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் ஒன்றாகத் தங்கியிருந்தபோது, சார்லி ஜோஸ் என்பவரின் மனைவிக்கு ஆல்பின் ராஜேஷ் அலைபேசியில் ஆபாசத் தொந்தரவு கொடுத்ததும், “உல்லாசமாக இருக்க வரியா” என அழைத்ததும் தெரியவந்தது.
இந்நிலையில், சொந்த ஊர் திருவிழாவிற்கு வந்த சார்லி ஜோஸ், தற்செயலாக டாஸ்மாக்கில் ஆல்பின் ராஜேஷை சந்தித்து அவரது எண்ணைப் பெற்றுள்ளார். பழைய பகையைத் தீர்க்கத் திட்டமிட்ட அவர், கறி விருந்து மற்றும் மது பார்ட்டி இருப்பதாகக் கூறி ஆல்பின் ராஜேஷைக் குளக்கரைக்கு வரவழைத்துள்ளார். அங்கு தனது நண்பர்களான சுபின் மற்றும் சுமன் ஆகியோருடன் சேர்ந்து ஆல்பின் ராஜேஷை மது குடிக்க வைத்து, வாக்குவாதம் முற்றிய நிலையில் படித்துறையில் தலையை மோதி கொலை செய்துள்ளார். பின்னர் சடலத்தின் ஆடைகளை எரித்துவிட்டு உடலைக் குளத்தில் வீசிவிட்டுப் பதுங்கியிருந்த மூவரையும், அலைபேசி சிக்னல் லொகேஷனை வைத்து போலீஸார் சில மணி நேரங்களிலேயே அதிரடியாகக் கைது செய்தனர்.
