“இது நம்ம ஊர்ல நடந்திருந்தா அவ்வளவுதான்… நடுரோட்டில் கிடந்த ரூ.1.5 லட்ச ஐபோன்…” அப்புறம் நடந்ததை பார்த்தா கண்டிப்பா ஷாக் ஆயிடுவீங்க..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இது நம்ம ஊர்ல நடந்திருந்தா அவ்வளவுதான்… நடுரோட்டில் கிடந்த ரூ.1.5 லட்ச ஐபோன்…” அப்புறம் நடந்ததை பார்த்தா கண்டிப்பா ஷாக் ஆயிடுவீங்க..!!

Published

on

ஜப்பானில் வாழும் இந்தியப் பெண் ஒருவர் தனது சுமார் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான ஐபோன் 16 புரோ கைபேசியை 5-வது முறையாகத் தவறவிட்டு, மீண்டும் பத்திரமாக மீட்ட சுவாரஸ்யமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜப்பான் நாட்டின் பாதுகாப்பு மற்றும் அந்நாட்டு மக்களின் நேர்மையை வெளிப்படுத்தும் இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோவை பிரகதி என்ற அந்த இந்தியப் பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

போனை அடிக்கடி பரிசோதித்துப் பார்க்கும் பழக்கம் இல்லாததால், ஒரு நாள் இரவு 12 மணியளவில்தான் தனது ஐபோன் காணாமல் போனதை பிரகதி உணர்ந்துள்ளார். உடனடியாகத் தனது மற்றொரு சாதனத்தின் மூலம் ‘Find My’ செயலியைப் பயன்படுத்தி போனின் இருப்பிடத்தைக் கண்காணித்தபோது, அது அவர் இருக்கும் இடத்தில் இருந்து சுமார் 600 மீட்டர் தொலைவில் ஒரு தெருவில் இருப்பது தெரியவந்தது. பதற்றத்துடன் அவர் அந்த இடத்திற்குச் சென்று பார்த்தபோது, அவரது போன் யாருமே தொடாமல் அப்படியே பத்திரமாக வைக்கப்பட்டு இருந்தது.

Advertisement

https://www.instagram.com/reel/Ddedp01pl9t/?utm_source=ig_web_button_share_sheet

இதற்கு முன்பும் பிரகதி தனது போனை காவல் நிலையம், காய்கறி சந்தை மற்றும் ஷாப்பிங் மாலின் ஆடை மாற்றும் அறை போன்ற இடங்களில் தவறவிட்டதாகவும், ஒவ்வொரு முறையும் அது அவருக்குப் பத்திரமாகக் கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். “உலகில் வேறு எந்த நாட்டிலாவது இது சாத்தியமா என்று தெரியவில்லை, ஆனால் ஜப்பானில் எனக்கு இப்படி நடப்பது இது 5-வது முறை” என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, ஜப்பான் மக்களின் இணையற்ற நேர்மையை நெட்டிசன்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in