CINEMA
“சிவாஜி என்னை பளார்னு அடிச்சுட்டாரு… அவரு படங்களைப் பார்த்துதான் சினிமாவுக்கே வந்தேன்..!” நடிகர் திலகம் பற்றி சீமான் ஓபன் டாக்..!!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தன்னை ஒருமுறை பளாரென்று அறைந்துவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேர்காணல் ஒன்றில் நினைவுகூர்ந்துள்ளார். யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், திரைப்பட படப்பிடிப்பு ஒன்றின்போது சிவாஜி கணேசன் வருகை தந்ததாகவும், அப்போது மரியாதை நிமித்தமாக அங்கு இருந்த அனைவரும் எழுந்து நின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது என்ன நினைத்தார் என்று தெரியவில்லை, தன்னை நோக்கி வந்த சிவாஜி கணேசன் எதிர்பாராதவிதமாகச் சரமாரியாக அறைந்தார் என சீமான் தெரிவித்துள்ளார். மேலும், சிறுவயது முதலே அவரது சிறந்த நடிப்பையும் திரைப்படங்களையும் பார்த்த ஈர்ப்பினாலேயே, தான் சினிமாத்துறைக்குள் வர வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும் அந்தப் பேட்டியில் அவர் உருக்கமாகப் பேசியுள்ளார்.
