“முதலில் மதிக்க கத்துக்கோங்க…” அஜித்தை விளாசித் தள்ளும் ரசிகர்கள்… லண்டனில் நடந்தது என்ன..?! – cinefeeds
Connect with us

CINEMA

“முதலில் மதிக்க கத்துக்கோங்க…” அஜித்தை விளாசித் தள்ளும் ரசிகர்கள்… லண்டனில் நடந்தது என்ன..?!

Published

on

அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர். இவர் எத்தனை தோல்வித் திரைப்படங்களைக் கொடுத்தாலும் இவருடைய ரசிகர்கள் இவரை ஒருபோதும் கைவிட்டதே இல்லை. ‘என் அளவுக்கு தோல்விப் படங்களை வேறு எந்த நடிகர்கள் கொடுத்திருந்தாலும் இந்த துறையில் நிலைத்து இருந்திருக்க மாட்டார்கள்’ என்று அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அப்படி இவரை இத்தனை காலம் தாங்கிப் பிடித்த ரசிகர்கள், தற்போது அஜித்தை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதற்கு காரணம் என்னவென்றால், சமீபத்தில் லண்டனில் நடந்த கார் பந்தயத்தின் போது, அஜித் அவர்களிடம் ஒரு ரசிகர் செல்ஃபி எடுக்க முயன்றார். அப்போது அஜித் அந்த ரசிகரை நகர்ந்து செல்லுமாறு கூறி, சில நிமிடங்கள் அவரை முறைத்துக்கொண்டே இருந்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வைரலானது.

Advertisement

அந்த வீடியோவைப் பார்த்த அஜித் ரசிகர்கள், “இயல்பாக நகருமாறு சொல்லி இருக்கலாமே, அதை விடுத்து ஏதோ குற்றம் செய்தவனைப் போல அவரை ஏன் அப்படி முறைத்துப் பார்க்க வேண்டும்? முதலில் மற்றவர்களை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறி அஜித்தின் இச்செயலைக் மிகக் கடுமையாகப் பேசி விமர்சித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in