CINEMA
என்னை அவமானப்படுத்தியவங்க யாருமே இதுவரை நல்லா வாழ்ந்தது இல்ல… நடிகர் ரவிமோகனின் தோழி பாடகி கெனிஷா பகிர்ந்த ‘பகீர்’ இன்ஸ்டா பதிவு…!!
பிரபல நடிகர் ரவி மோகன் தற்போது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்து, யோகி பாபுவை முதன்மைக் கதாபாத்திரமாக வைத்து ‘An ordinary man’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்குப் பாடகி கெனிஷா பிரான்சிஸ் இசையமைத்து வருகிறார். சமீபகாலமாக ரவி மோகனின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட விவாகரத்து விவாதப் பொருளான நிலையில், அவரது தோழியான கெனிஷாவுடன் ஏற்பட்ட நெருக்கமும் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது.
இந்நிலையில், பாடகி கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு மறைமுகமான பதிவு இணையத்தில் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது. அதில், “என்னை அவமானப்படுத்தியவர்களில் ஒருவர் கூட இதுவரை நல்லபடியாக வாழ்ந்ததே இல்லை” என்று அவர் ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார். இந்தச் சர்ச்சை பதிவின் மூலம் கெனிஷா யாரைக் குறிப்பிட்டுத் தாக்கியுள்ளார் என்று நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை இணையத்தில் எழுப்பி வருகின்றனர்.
