LATEST NEWS
ஐயோ இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது..! “அம்மா, அப்பா காட்டுக்கு போயிருக்காங்க..” பெற்றோர் இறந்தது தெரியாமல் காத்திருக்கும் 12 வயது சிறுவன்… உண்மையை மறைத்த உறவினர்கள்… நெஞ்சை உலுக்கும் நேபாள வெள்ளப் பேரழிவு துயரம்..!!
நேபாள-திபெத் எல்லையில் திடீரென ஏற்பட்ட பனிப்பாறை சரிவு மற்றும் பாறை வெடிப்பு காரணமாக ரசுவா மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 26 அன்று கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் நேபாளத்தில் மட்டும் 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளனர். இந்த வெள்ளத்தால் மொத்த கிராமங்களும், குடியிருப்புகளும் வரைபடத்திலிருந்தே முற்றிலும் துடைத்தெறியப்பட்டுள்ளன.
இந்த பேரழிவில் வீடிழந்த 520-க்கும் மேற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், தற்போது காத்மாண்டுவில் உள்ள ஒரு பௌத்த மடாலயத்தில் தற்காலிகமாகத் தங்கியுள்ளனர். அங்கிருக்கும் பல குடும்பங்கள் தங்களின் வீடுகள், வாழ்வாதாரங்கள் மற்றும் உறவினர்களை இழந்து ஒட்டுமொத்தமாக ‘பூஜ்ஜியம்’ என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த முகாமில் உள்ள தொண்டர் ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட உறவினர்கள் இந்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ள சோகம் ஒட்டுமொத்த இழப்பின் வீரியத்தைக் காட்டுகிறது.
இந்த துயரங்களுக்கு மத்தியில், செரிங் என்ற 12 வயது சிறுவனின் கதை நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. வெள்ளத்தில் அவனது தாய் கம்மி, தந்தை புர்சாங் ஆகிய இருவருமே இறந்துவிட்டனர்; ஆனால் அவனைக் கவனித்துக் கொள்ளும் உறவினர்கள் அவனிடம் இந்த உண்மையை இன்னும் கூறவில்லை. பெற்றோர் காட்டில் இருப்பதாகவும், சாலைகள் உடைந்திருப்பதால் வர இரண்டு ஆண்டுகள் ஆகும் என்றும் கூறியுள்ளதை நம்பி, அந்த சிறுவன் தனது பெற்றோர் எப்போது வருவார்கள் என்று அறியாமல் இன்னும் காத்துக்கொண்டிருக்கிறான்.
