FLASH: இடைத்தேர்தலில் திமுகவுடன் கூட்டணி..? எடப்பாடி பழனிசாமி கொடுத்த ‘பகீர்’ டுவிஸ்ட்… அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

FLASH: இடைத்தேர்தலில் திமுகவுடன் கூட்டணி..? எடப்பாடி பழனிசாமி கொடுத்த ‘பகீர்’ டுவிஸ்ட்… அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்..!!

Published

on

இடைத்தேர்தலில் அதிமுக புதிய அணியை உருவாக்குமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தங்களுக்கு ஏற்கனவே பலமான கூட்டணி அணி உள்ளதாகப் பதிலளித்துள்ளார். மேலும், இடைத்தேர்தல் களத்திற்குப் புதிய கட்சிகள் ஏதேனும் வந்தாலும், அவர்களைத் தங்கள் கூட்டணியில் இணைத்துக் கொள்ளத் தயாராக இருப்பதாக அவர் தந்தி டிவி கார்டில் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள், “உடனே திமுக வந்தாலும் உங்கள் கூட்டணியில் சேர்த்துக் கொள்வீர்களா?” என்ற கேள்வியை எடப்பாடி பழனிசாமியிடம் முன்வைத்தனர். அதற்கு அவர், அரசியல் கள நிலவரத்தைக் குறிப்பிட்டு, “திமுக வருமா? இந்த கேள்வியைக் கேட்கலாமா?” என்று புன்னகையோடு நகைச்சுவையாகப் மறுகேள்வி எழுப்பிப் பதிலளித்துள்ளார்.

Advertisement

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணிக் கதவுகள் திறந்தே இருப்பதாக இபிஎஸ் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, திமுக கூட்டணிக்கு மாற்றாகப் புதிய கட்சிகளைத் தன்பக்கம் ஈர்க்க அதிமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருவதை இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in