என் சொத்தையெல்லாம் கோயிலுக்கு எழுதி வச்சிட்டு.. எங்கயாவது போயிடணும்னு நினச்சேன்.. அப்போதான் ஒரு போன் வந்துச்சி… உருக்கமாக பேசிய அமைச்சர் மரிய வில்சன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

என் சொத்தையெல்லாம் கோயிலுக்கு எழுதி வச்சிட்டு.. எங்கயாவது போயிடணும்னு நினச்சேன்.. அப்போதான் ஒரு போன் வந்துச்சி… உருக்கமாக பேசிய அமைச்சர் மரிய வில்சன்..!!

Published

on

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அமைச்சர் மரியா வில்சன் பேசிய உருக்கமான பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒற்றைப் பெற்றோராக தனது மகளை வளர்ப்பதற்கு மிகவும் சிரமப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், கொரோனா பேரிடருக்குப் பிறகு விரக்தியடைந்து தனது சொத்துக்கள் அனைத்தையும் கோவிலுக்கு எழுதி வைத்துவிட்டு எங்காவது சென்றுவிடலாம் என்று நினைத்ததாக அவையில் தெரிவித்தார்.

அந்த இக்கட்டான சூழ்நிலையில் தான், தனக்கு ஆதவ் அர்ஜுனாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக அமைச்சர் மரியா வில்சன் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆதவ் அர்ஜுனா தான் தன்னைத் தற்போதைய முதல்வர் விஜய் அவர்களிடம் அழைத்துச் சென்று, தனது வாழ்க்கையில் ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்தினார் என்றும் அவர் மிகவும் நெகிழ்ச்சியுடன் பேரவையில் உரையாற்றினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in