கலக்கத்தில் விஜய்..! 5 ஆண்டுகள் ஆதரவு கொடுப்போம் என்பதை உறுதியாக சொல்ல முடியாது.. திடீர் குண்டை தூக்கிப்போட்ட CPM கட்சி.. தவெக வுக்கு சிக்கல்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கலக்கத்தில் விஜய்..! 5 ஆண்டுகள் ஆதரவு கொடுப்போம் என்பதை உறுதியாக சொல்ல முடியாது.. திடீர் குண்டை தூக்கிப்போட்ட CPM கட்சி.. தவெக வுக்கு சிக்கல்…!!

Published

on

தமிழக வெற்றிக் கழக அரசுக்கு 5 ஆண்டுகள் முழுமையாக ஆதரவு கொடுப்போம் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது என்று சிபிஎம் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎம் கட்சியின் சண்முகம் பேசியுள்ளதாவது, “தவெக அரசுக்கு 5 ஆண்டுகள் ஆதரவு கொடுப்போம் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. அரசின் பொருளாதார மற்றும் அரசியல் கொள்கை, தொழிலாளர்கள் சார்ந்த போக்கின் அடிப்படையிலேயே எங்களது ஆதரவு இருக்கும்” என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். சட்டமன்ற நிகழ்வுகள் மற்றும் விவாதங்களுக்கு மத்தியில் தவெக அரசுக்கான ஆதரவு நிலைப்பாடு குறித்து சிபிஎம் இந்த அதிரடி கருத்தை வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பிறகு, ஆளும் தவெக அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே அரசியல் ரீதியான மோதல்கள் தீவிரமடைந்து வருகின்றன. ஏற்கனவே சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முதலமைச்சர் விஜய்யின் மிசா குறித்த பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தவெக அரசுக்கு அளிக்கும் ஆதரவு நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்பதை சண்முகம் இந்த அறிக்கை மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்திலும், தவெக கூட்டணிக்குள்ளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in