திமுக – அதிமுக கூட்டு ஆட்சியை தடுத்து நிறுத்தியது யார் தெரியுமா..? தவெக சொல்வது வடிகட்டின பொய்… மேடையில் கிழித்துத் தொங்கவிட்ட சண்முகம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திமுக – அதிமுக கூட்டு ஆட்சியை தடுத்து நிறுத்தியது யார் தெரியுமா..? தவெக சொல்வது வடிகட்டின பொய்… மேடையில் கிழித்துத் தொங்கவிட்ட சண்முகம்..!!

Published

on

திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சி அமைப்பதைத் தடுத்து நிறுத்தியது இடதுசாரிகள்தான் என்று சிபிஎம்மூத்த தலைவர் சண்முகம் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். தாராபுரம் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அங்கு நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், தற்போது தமிழ்நாட்டில் நடந்து வரும் அரசியல் நகர்வுகள் குறித்துப் பல்வேறு பரபரப்புப் புகார்களை முன்வைத்துப் பேசினார்.

திமுகவுடன் அதிமுக இரகசியக் கூட்டணி அமைக்க முயன்றதால்தான் தாங்கள் கட்சியை விட்டு வெளியேறியதாகத் தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் கூறி வருவது வடிகட்டிய பொய் என்று சண்முகம் கடுமையாகச் சாடினார். உண்மையில் திமுகவுடன் சேர்வது அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், தவெக சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு முன்பாகவே அவர்கள் முறைப்படி அக்கட்சியில் இணைந்திருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டி தவெகவினரின் வாதங்களை அவர் மறுத்தார்.

Advertisement

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நிலவிய இக்கட்டான அரசியல் சூழ்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் எடுத்த உறுதியான நிலைப்பாடுதான், திமுக-அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளும் இணைந்து கூட்டு ஆட்சி அமைப்பதைத் தடுத்து நிறுத்தியதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். தாராபுரம் இடைத்தேர்தல் நெருங்கும் வேளையில், தவெக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் ஒரே மேடையில் இடதுசாரிகள் விமர்சித்துள்ளது கொங்கு மண்டல தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in