LATEST NEWS
1 இல்ல 2 இல்ல ரூ.2,000 கோடி..! பட்ஜெட்டிலேயே கைவச்ச திமுக மாஜி அமைச்சர்..? எ.வ.வேலுவை குறிவைத்த ஆதவ் அர்ஜுனா.. பேரவையில் வெடித்த பகீர் வெடிகுண்டு..!
முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு மீது தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில் உரிமை மீறல் புகாரை முன்மொழிந்துள்ளார். பேரவையில் பேசிய அவர், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சட்டமன்றத்தின் எவ்வித ஒப்புதலையும் பெறாமல், விதிகளுக்குப் புறம்பாக 80 பணிகளுக்காக ₹2,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டதாகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்ற அதீத நம்பிக்கையில், எதிர்கால பட்ஜெட்டில் இருந்து இந்த பெருந்தொகையை முன்கூட்டியே எடுத்துப் பயன்படுத்தியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் ஒட்டுமொத்த அவையின் உரிமையைப் பறிக்கும் செயல் என்பதால், இதுகுறித்து சட்டமன்ற அவை உரிமை குழு (Privilege Committee) விரிவான விசாரணை நடத்த வேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தினார். திமுக ஆட்சியில் நடைபெற்ற இந்த நிதி ஒதுக்கீடு தொடர்பான புகாரால் தற்போது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
