CRIME
“நெஞ்சை உலுக்கும் கொடூரம்.. ” வாயில்லா ஜீவனுக்கு நேர்ந்த கொடுமை… இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் நபர் ஒருவர் விறகு நெருப்பு மூட்டி, அதன் மேல் நாய் ஒன்றை கொடூரமான முறையில் சுடுவதைக் காட்டும் மனதை உலுக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ரா கமிஷனரேட்டின் சையன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு விலங்குச் சந்தை மைதானத்தின் அருகே இந்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, உள்ளூர் மக்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பும் கோபமும் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து சையன் காவல் நிலைய பொறுப்பாளர் பிரதீப் குமார் திரிபாதி கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாகக் காவல்துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து வரும் போலீஸார், அதில் நாய் மீது கொடூரம் இழைக்கும் நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அந்த மைதானத்தின் அருகே தங்கியிருக்கும் நாடோடி சமூகத்தினர் சிலர் நாய் கறியைச் சாப்பிடுவதற்காக இவ்வாறு செய்திருக்கலாம் என்ற உள்ளூர் மக்களின் குற்றச்சாட்டுகள் குறித்தும், இது எப்போது எடுக்கப்பட்ட வீடியோ என்பது குறித்தும் போலீஸார் அனைத்து கோணங்களிலும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்
