CRIME
“விஷக் காளானால் கொலை செய்வது எப்படி..?” காதலியின் கூகுள் தேடல்.. காதலன் கொலையில் வெளிவந்த 5,053 பக்க பகீர் ரகசியம்.. திடுக்கிடும் பின்னணி..!!
புனேவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கேதன் அகர்வால் கொலை வழக்கில், காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள 5,053 பக்கங்கள் கொண்ட பிரம்மாண்ட குற்றப்பத்திரிகை மூலம் பல திடுக்கிடும் சதித் திட்டங்கள் வெளிவந்துள்ளன. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சியா கோயல், கொலையை அரங்கேற்றுவதற்கு முன்பு ‘சோனம் வழக்கு’ மற்றும் ‘விஷக் காளான்களைப் பயன்படுத்தி கொலை செய்வது எப்படி’ போன்ற தலைப்புகளில் கூகுளில் தீவிரமாகத் தேடியுள்ளார். மொபைல் தரவுகள், சாட்டிங் பதிவுகள், அழைப்பு விவரங்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் ஆகியவற்றின் மூலம் இந்தத் திட்டமிட்ட படுகொலைக்கான ஆதாரங்களை போலீஸார் திரட்டியுள்ளனர்.
விஷக் காளான் திட்டத்திற்குப் பிறகு, கொலை செய்வதற்கான சரியான இடமாக லோகட் பகுதியைத் தேர்ந்தெடுத்து, அங்கு முன்கூட்டியே சென்று நோட்டமிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, கடந்த மே 31-ஆம் தேதி அன்று மலையேற்றம் செல்லலாம் என நயவஞ்சகமாக ஆசை வார்த்தை கூறி கேதனை அந்தப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து அவரைப் பள்ளத்தாக்கிற்குள் தள்ளி கொடூரமாகக் கொலை செய்துள்ளதாகக் குற்றப்பத்திரிகையில் விவரிக்கப்பட்டுள்ளது.
