CRIME
“அய்யோ ச்சீ.. தோசைக்குள் இருந்தது என்ன..?” சாப்பிட்ட சில நிமிடங்களில் வாந்தி எடுத்த வாடிக்கையாளர்.. பிரபல ஹோட்டலில் நடந்த பயங்கரம்…!!
மும்பையின் போரிவலி மேற்கு ரயில் நிலையம் அருகே உள்ள ‘ராதாகிருஷ்ணா’ ஹோட்டலில், மைசூர் மசாலா தோசைக்குள் இறந்த எலி இருந்ததாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர் ஒருவர் தனது சகோதரருடன் அந்த உணவகத்திற்குச் சென்று தோசை ஆர்டர் செய்து சாப்பிடத் தொடங்கியுள்ளார். தோசையின் சில துண்டுகளைச் சாப்பிட்ட பிறகு, உணவுக்குள் ஏதோ வித்தியாசமாக இருப்பதை கவனித்துப் பார்த்தபோது, அதற்குள் ஒரு சிறிய இறந்த எலி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக வாந்தி எடுத்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் போரிவலி காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளனர். புகாரைத் தொடர்ந்து, சமையலறையின் முழுச் சூழல், உணவுப் பொருட்கள் சேமிக்கப்படும் விதம் மற்றும் எலி, கரப்பான் பூச்சிகளைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள சுகாதார நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மகாராஷ்டிராவில் கடந்த சில வாரங்களாக உணவகங்களில் பூச்சிகள் இருப்பது, சுகாதாரக் குறைபாடுகள் போன்ற காரணங்களால் பல உணவகங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது
