“சித்தி எனக்கு செய்வினை வச்சுட்டாங்க..” ஜோதிடர் சொன்ன வார்த்தை.. நள்ளிரவு 12 மணிக்கு வாலிபர் செய்த வெறிச்செயல்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“சித்தி எனக்கு செய்வினை வச்சுட்டாங்க..” ஜோதிடர் சொன்ன வார்த்தை.. நள்ளிரவு 12 மணிக்கு வாலிபர் செய்த வெறிச்செயல்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே கண்டகானப்பள்ளி கிராமத்தில், செய்வினை வைத்ததாக ஏற்பட்ட மூடநம்பிக்கை சந்தேகத்தால் சரசம்மா (50) என்ற பெண் நள்ளிரவில் கொடூரமாகக் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். சலூன் கடை நடத்தி வந்த அசோக் (27) என்ற வாலிபருக்குத் தொடர்ந்து உடல்நலக் குறைவு ஏற்பட்டதோடு, வியாபாரமும் முடங்கியுள்ளது. இதுகுறித்து ஜோதிடம் பார்த்தபோது யாரோ செய்வினை வைத்துள்ளதாக ஜோதிடர் கூறியதை நம்பிய அசோக், தனது சித்தியான சரசம்மா தான் இதற்குக் காரணம் எனச் சந்தேகித்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று இரவு 11 மணியளவில் மதுபோதையில் சரசம்மாவின் வீட்டிற்குச் சென்ற அசோக், தூங்கிக் கொண்டிருந்த அவரிடம் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரமடைந்த அசோக் திடீரென சரசம்மாவின் கழுத்தை அறுத்ததில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கொலைக்குப் பின் தப்பியோடிய அசோக், நள்ளிரவு 12.30 மணியளவில் தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையத்தில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் தானே சென்று சரணடைந்தார். போலீஸார் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதோடு, அசோக்கை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in