LATEST NEWS
“பெத்தவங்களா நீங்க..?” நடுரோட்டில் பிஞ்சு குழந்தைகளை சித்திரவதை செய்யும் அவலம்.. நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்த வீடியோ..!!
நம்பிக்கையின் பெயராலும் மதச் சடங்குகளின் பெயராலும் குழந்தைகளை வெயிலில் அமர வைத்து, பணமீட்டும் கருவியாகப் பயன்படுத்தும் பெற்றோர்களின் செயல் சமூகத்தில் பெரும் வேதனையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சுயமாக உழைத்துச் சம்பாதிக்கத் துப்பில்லாத சில பெற்றோர்கள், தங்களின் சுயநலத்திற்காகப் பிஞ்சுப் பிள்ளைகளைக் கடும் வெயிலில் தூக்கமில்லாமல் தவிக்க விடுகின்றனர். போதிய தூக்கமும் ஓய்வும் இன்றி, சுட்டெரிக்கும் வெயிலில் அமர வைக்கப்பட்டுள்ள அந்தக் குழந்தைகள் கடும் மன உளைச்சலுக்கும் உடல் உபாதைகளுக்கும் ஆளாகியுள்ளனர்.
தங்கள் சொந்தக் குழந்தைகளைக் கடின உழைப்பால் கண்ணியமாக வளர்க்கத் துப்பில்லாத இந்தப் பெற்றோர்கள், குழந்தைகளைப் பெற்றெடுத்ததற்கே வெட்கப்பட வேண்டும். பிஞ்சுக் குழந்தைகளின் உரிமைகளைப் பறித்து, அவர்களைத் துன்புறுத்திப் பிழைப்பு நடத்தும் இத்தகைய பெற்றோர்களைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி முறையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். பெற்ற பிள்ளைகளைத் தங்களின் சுயநலத்திற்காகச் சித்திரவதை செய்யும் இத்தகையப் போக்குகள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் ஆதங்கமாக உள்ளது.
