LATEST NEWS
டாஸ்மாக் கடைகளுக்கு மாதம் ரூ.5,000.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு..!!
தமிழக அரசு டாஸ்மாக் கடைகளுக்கு மாதம் ரூ.5,000 வரை பராமரிப்புத் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதன்படி, மாநகராட்சிப் பகுதிகளில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளுக்கு ரூ.5,000 பராமரிப்புத் தொகையாக அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நகராட்சிகளில் உள்ள கடைகளுக்கு ரூ.4,000 என்றும், ஊரகப் பகுதிகளில் செயல்படும் கடைகளுக்கு ரூ.3,000 என்ற அளவிலும் பராமரிப்புத் தொகை வழங்கப்படும். டாஸ்மாக் ஊழியர்களின் ஊதியம் ரூ.10,000 வரை உயர்த்தப்பட்டிருந்த நிலையைத் தொடர்ந்து, தற்போது இந்த பராமரிப்புத் தொகையும் வழங்கப்படுகிறது.
