“அப்படி ஒரு சம்பவமே நடக்கல…” ஒரே ஒரு ‘ரெட்டிட்’ போஸ்ட்… பற்றியெரிந்த பல்கலைக்கழகம்..! மாணவி விவகாரத்தில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அப்படி ஒரு சம்பவமே நடக்கல…” ஒரே ஒரு ‘ரெட்டிட்’ போஸ்ட்… பற்றியெரிந்த பல்கலைக்கழகம்..! மாணவி விவகாரத்தில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!!

Published

on

பஞ்சாப்பின் பக்வாராவில் உள்ள லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சமூக வலைத்தளமான ‘ரெட்டிட்’டில் பரவிய செய்தி வெறும் வதந்தியே என பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். கடந்த வார இறுதியில் பரவிய இந்த வதந்தியைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். பின்னர் இந்த போராட்டம் வன்முறையாக மாறியதில் பல்கலைக்கழக வளாகம் சேதமடைந்ததுடன், அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் காவல்துறை வாகனங்களுக்கும் தீவைத்தனர். இதனால் நிலைமை மோசமடைந்ததையடுத்து 10 நாட்களுக்கு வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதுகுறித்து பல்கலைக்கழக டீன் டாக்டர் சௌரப் லக்கன்பால் கூறுகையில், விசாரணையின் முடிவில் பாலியல் வன்கொடுமை சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்பதும், அது முற்றிலும் வதந்தி என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மாணவர்களிடம் இச்சம்பவம் தொடர்பான பெயர், இடம் அல்லது எழுத்துப்பூர்வமான ஆதாரங்களைக் கேட்டபோதும் யாராலும் எந்தத் தகவலையும் வழங்க முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே, அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்த விரும்பிய மாணவர்கள் மத்தியில், முகமூடி அணிந்து கம்பிகளுடன் நுழைந்த சில வெளியாட்களே பல்கலைக்கழகச் சொத்துக்களைச் சேதப்படுத்தி கலவரத்தை ஏற்படுத்தியதாக டீன் லக்கன்பால் விளக்கியுள்ளார்.

Advertisement

காவல்துறையின் தலையீட்டிற்குப் பிறகு நிலைமை மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதுடன், கலவரத்தில் ஈடுபட்ட சில முகமூடி நபர்களைக் கைது செய்து அவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் பணியில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது. மேலும், எல்.பி.யு நிறுவனரும் வேந்தருமான அசோக் குமார் மிட்டல் ஒரு பாஜக எம்.பி என்பதால், இக்கலவரத்திற்குப் பின்னால் அரசியல் உள்நோக்கம் இருக்கலாம் எனச் சில அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. எனினும், இதில் தனிப்பட்ட முறையில் எந்தவொரு அரசியல் தலையீட்டையும் தாம் காணவில்லை என்று டாக்டர் லக்கன்பால் தெளிவுபடுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in