LATEST NEWS
திக் திக் நிமிடங்கள்…! ஓடும் ரெயிலில் திடீரென மளமளவென பற்றிய தீ… அலறியடித்து வயலுக்குள் ஓடிய பயணிகள்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!
பஞ்சாபில் ஓடும் ரெயிலில் பயங்கர தீ விபத்தானது ஏற்பட்டிருக்கிறது. கர்மபூமி எக்ஸ்பிரஸ் ரெயிலின் 4 பெட்டிகள் தீயில் எரிந்து சேதமாகியுள்ளன. பஞ்சாப் மாநிலம் பட்டியாலா மாவட்டத்தில் உள்ள ராஜ்புரா பகுதி அருகே, அமிர்தசரஸ் நோக்கி சென்று கொண்டிருந்த கர்மபூமி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த ரெயில் மேற்கு வங்காளத்தில் நியூ ஜல்பைகுரி பகுதியில் இருந்து அமிர்தசரஸ் வரை இயக்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று மதியம் 1 மணியளவில் அந்த ரெயிலின் 5-வது பெட்டியில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. ஓடும் ரெயிலில் தீப்பற்றியதால் பயணிகளிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து ரெயில் ஓட்டுநர் உடனடியாக சுதாரித்து ரெயிலை நிறுத்தினார். பயணிகள் அலறியடித்துக் கொண்டு ரெயிலில் இருந்து இறங்கி அருகில் இருந்த வயல் வெளிகளுக்குள் ஓடிச்சென்றனர்.
இதற்குள் ரெயிலின் 4 பெட்டிகளுக்கு தீ மளமளவென பரவியது. இது குறித்து தகவலறிந்து ரெயில்வே காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமோ அல்லது உயிர் சேதமோ ஏற்படவில்லை. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தொடர்ந்து இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
