LATEST NEWS
ஷாக் நியூஸ்..! கேட்ச் பிடிக்க முயன்ற போது நடந்த அசம்பாவிதம்..! காயம் காரணமாக வெளியேறிய முக்கிய வீரர்… சோகத்தில் ரசிகர்கள்..!!
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி கடந்த புதன் கிழமை நடைபெற்றது. இந்நிலையில், பயிற்சி மேற்கொள்ளும் போது கேட்ச் பிடிக்க முயற்சித்தபோது டேவன் கான்வே மற்றும் மாட் ஹென்ரி ஆகியோர் பயங்கரமாக மோதிக் கொண்டனர். இதில் இருவருக்கும் தலையில் அடிபட்ட நிலையில், அணி மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவர்களுக்கு மூளையதிர்ச்சி ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் அவர்கள் உடனடியாக வெளியேறியதுடன், முதல் ஒருநாள் போட்டியிலும் விளையாடவில்லை.
இதையடுத்து, வேகப்பந்து வீச்சாளர் மாட் ஹென்ரி தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், நன்றாக இருப்பதாகவும் தெரிவித்துள்ள நிலையில், மருத்துவர்களும் அவருக்கு விளையாட அனுமதி அளித்துள்ளனர். இதனால் அவர் நாளைய இரண்டாவது போட்டியில் விளையாடவுள்ளார். ஆனால், டேவன் கான்வே இன்னும் மூளையதிர்ச்சியில் இருந்து முழுமையாக மீளவில்லை என்பதால், அவர் எஞ்சிய அனைத்து போட்டிகளிலும் சேர்த்து இந்தத் தொடர் முழுவதிலும் இருந்தும் விலகியுள்ளார்.
கான்வே விலகியதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக நிக் கெல்லி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் முன்னதாக 4-வது மற்றும் 5-வது போட்டிக்கான அணியில் இடம்பிடித்திருந்த நிலையில், தற்போது முன்கூட்டியே 2-வது போட்டிக்கான அணியில் இணைகிறார். இதன் காரணமாக இவர் நியூசிலாந்து ஏ அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
