LATEST NEWS
அய்யோ போச்சுன்னு நினைச்சாங்க… ஆனா நடந்தது தான் செம்ம ட்விஸ்ட்..! பந்து தரையில் படுவதற்குள் செம்ம கேட்ச் பிடித்த ஃபஹீம் அஷ்ரஃப்..! வைரலாகும் வீடியோ..!!
வாவல்பின்டியில் நடைபெற்ற போட்டியில், நசீம் ஷா வீசிய பந்தில் இலங்கை அணியின் தொடக்க வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ புல் ஷாட் அடிக்க முயன்றபோது பந்து சரியாகப் படாமல் மேல்நோக்கிச் சென்றது. ராவல்பிண்டி மைதானத்தின் வானை நோக்கி பந்து உயர்ந்தபோது, விக்கெட் கீப்பர் சாத் பைக் பின்னோக்கி ஓடிவந்தார்; அதேவேளையில் லாங் லெக் திசையிலிருந்து ஃபஹீம் அஷ்ரஃபும் பந்தைப் பிடிக்க ஓடிவந்தார்.
சாத் பைக் ஆரம்பத்தில் கேட்சைப் பிடிக்கும் நிலையில் இருந்தபோதிலும், முக்கியமான தருணத்தில் பந்து அவரது கைகளில் இருந்து நழுவிப்போனது. இதனால் விக்கெட் நழுவிவிடும் என்ற நிலையில், உடனடியாக சுதாரித்துக்கொண்ட ஃபஹீம் அஷ்ரஃப் மிகவும் விரைவாகக் குனிந்து, பந்து தரையில் படுவதற்கள் வெற்றிகரமாகக் கேட்சைப் பிடித்து முடித்தார்.
இந்த நிகழ்வு ஃபஹீம் அஷ்ரஃபின் கூர்மையான துடிப்பையும், அழுத்தமான சூழ்நிலையில் அவரது மன உறுதியையும் வெளிப்படுத்தியது. ஃபஹீமின் இந்தத் தரமான தலையீட்டால் சாத் பைக்கின் தவறான பிடிக்குப் பிறகு ஏற்படவிருந்த சிக்கல் தவிர்க்கப்பட்டு, பாகிஸ்தானுக்கு ஒரு முக்கியமான விக்கெட் கிடைத்தது.
