CRIME
“சாதாரண வயிற்றுவலின்னு நினைச்சோம்” வலி தாங்க முடியாமல் மருத்துவமனை சென்ற 15 வயது சிறுமி.. பெற்றோர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!!
ஹரியானா மாநிலம் நூஹ் பகுதியைச் சேர்ந்த 22 வயது நபர் ஒருவர், இன்ஸ்டாகிராம் மூலம் 15 வயது சிறுமியுடன் பழகி, பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளம் மூலம் ஏற்பட்ட இந்தத் தொடர்பு, சிறுமியின் அறியாமையைப் பயன்படுத்தி தொடர்ச்சியாகத் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.
தகுந்த விழிப்புணர்வு மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு இல்லாததால், அச்சம் காரணமாக சிறுமி இந்த விவகாரத்தை யாரிடமும் தெரிவிக்காமல் மறைத்துள்ளார். இதனிடையே, கடந்த ஆகஸ்ட் 1 அன்று வீட்டைவிட்டு வெளியேறிவிட்டு பின்னர் உடல்நலக்குறைவுடன் வீடு திரும்பிய சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக சோஹ்னா பகுதியில் உள்ள துணை மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு, பரிசோதனையின் போது கர்ப்பமாக இருந்து பிரசவ வலி வந்தது தெரியவந்தது; இது மருத்துவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்தது.
இதனைத் தொடர்ந்து, குருகிராம் சோஹ்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், தலைமறைவாகியுள்ள குற்றவாளியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
