தள்ளாடும் காவல்துறை… Rest-ஐ விட்டுவிட்டு துறையைக் கவனியுங்க CM சார்… முதலமைச்சரைச் சாடிய திமுக தலைவர்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தள்ளாடும் காவல்துறை… Rest-ஐ விட்டுவிட்டு துறையைக் கவனியுங்க CM சார்… முதலமைச்சரைச் சாடிய திமுக தலைவர்..!!

Published

on

போதைப்பொருள் கடத்தலை முற்றிலும் கட்டுப்படுத்த முதலமைச்சர் முதலில் தனது கட்சியினரைத் தன் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்றும், அதற்கு காவல்துறை முதலில் அவரது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாகச் சாடியுள்ளார். மேலும், முதலமைச்சரின் அலட்சியப் போக்கு மக்களின் உயிரைப் பறிப்பதாகக் குறிப்பிட்ட அவர், “போதைப்பொருளை விடு, விளையாட்டை எடு” என்று கூறிய முதலமைச்சர், முதலில் ஓய்வு எடுப்பதை விட்டுவிட்டுத் தனது பொறுப்பிலுள்ள காவல்துறையைக் கையில் எடுத்துச் சரியாகச் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மாநிலத்தில் நிற்காமல் தொடர்ந்து நடைபெறும் அரிவாள் வெட்டுச் சம்பவங்களும், தொடர்ச்சியாகச் சிக்கி வரும் போதைப்பொருள் கடத்தல்களுமே தமிழக அரசு காவல்துறையில் உரிய கவனம் செலுத்துவதில்லை என்பதைத் தெள்ளத்தெளிவாகக் காண்பிக்கின்றன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காவல்துறையின் செயல்பாடு சீர்குலைந்து தள்ளாடிக் கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், மாநிலத்தில் சட்ட ஒழுங்கைச் சீரமைக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in