CRIME
சிக்கினார் தவெக முன்னாள் நிர்வாகி..! பின்னணியில் ரூ.100 கோடி மதிப்புள்ள பொருட்கள்… அடுத்தடுத்து வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்..!!
இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூபாய் 100 கோடி மதிப்பிலான 137 கிலோ எடை கொண்ட கிறிஸ்டல் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை நாகப்பட்டினத்தில் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் பறிமுதல் செய்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த அக்டோபர் 16 மற்றும் 17 தேதிகளில் நடத்தப்பட்ட தீவிர சோதனைகளில் இந்த மாபெரும் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த அதிரடி சோதனையின் போது ரூபாய் 10 லட்சம் ரொக்கம், 4 கார்கள், 1 மோட்டார் பைக் மற்றும் 27 வெள்ளித் தகடுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
