LATEST NEWS
தாய்மாமன் மோதிரத்திற்கு ரூ.500 லஞ்சம்… தூய்மைப் பணியாளர்கள் 5 பேர் அதிரடி டிஸ்மிஸ்..! அரசு மருத்துவமனையில் பயங்கர பதற்றம்..!!
தர்மபுரி அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்க ரூ.500 வசூலித்ததாக புகாருக்குள்ளான 5 தற்காலிக தூய்மைப் பணியாளர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அங்கு பிறந்த குழந்தைக்கு தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் நிகழ்வின் போது, பணியாளர்கள் பணம் வசூல் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரணை நடத்திய மருத்துவமனை டீன், ஐந்து பேரையும் பணியில் இருந்து நீக்குமாறு உத்தரவிட்டார்.
இதையறிந்து அதிர்ச்சியடைந்த தூய்மைப் பணியாளர்கள், தாங்கள் பணம் எதுவும் வசூலிக்கவில்லை என்றும், இது தங்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என்றும் கூறி பூச்சிக் கொல்லி மருந்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
