LATEST NEWS
“ரூ.4,000 கோடியை என்ன பண்ணீங்க..? அதனால்தான் தண்ணீர் வடிஞ்சது..” கேள்வி கேட்ட தவெகவினருக்கு பதிலடி கொடுத்த திமுக..! அனல் பறக்கும் அரசியல் விவாதம்..!!
சென்னையில் மிக கனமழை பெய்து பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால், மழைநீர் வடிகால் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.4,000 கோடியை அப்போதைய திமுக அரசு என்ன செய்தது? நிதியை முறையாகப் பயன்படுத்தவில்லையா என்று தமிழக வெற்றிக் கழகத்தின் விர்ச்சுவல் வாரியர்ஸ் கேள்வி எழுப்பினர்.
மறுநாள் தேங்கிய தண்ணீர் வடிந்ததையடுத்து, அது தவெக அரசின் சிறப்பான செயல்பாடு என்று அக்கழகத்தினர் குறிப்பிட்டனர். இதற்கிடையே, ரூ.4,000 கோடி நிதியை முறையாகவும் திறம்படவும் பயன்படுத்தியதாலேயே மழைநீர் விரைவாக வடிந்தது என்று திமுகவினர் அவர்களுக்குப் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
