“முதலமைச்சர் சொல்வதை விடு, Drugs-ஐ எடு” இதுதான் நீங்க சொன்ன லட்சணமா..? முதல்வரை கிழித்து தொங்கவிட்ட உதயநிதி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“முதலமைச்சர் சொல்வதை விடு, Drugs-ஐ எடு” இதுதான் நீங்க சொன்ன லட்சணமா..? முதல்வரை கிழித்து தொங்கவிட்ட உதயநிதி..!!

Published

on

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூபாலன் வீட்டில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் நடத்திய சோதனையில், இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த சுமார் 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் மற்றும் பல லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் இவ்வளவு பெரிய அளவில் போதைப்பொருள் சிக்கியுள்ள நிகழ்வு அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்துக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். ‘ஆட்சிக்கு வந்ததும் போதையை ஒழிப்பேன்’ என்று கூறிவிட்டு, தனது கட்சிக்காரர்களையே போதைப்பொருள் கடத்தவிட்டு வேடிக்கை பார்ப்பதுதான் போதை ஒழிப்பு லட்சணமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

மேலும் ஆட்சிக்கு வந்ததும் போதையை ஒழிப்பேன் என்று சொன்ன Dummy CM, தன் கட்சிக்காரர்களையே கடத்தவிட்டு வேடிக்கை பார்ப்பதுதான் போதை ஒழிப்பு லட்சணமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், முதல்வர் “Drugs-ஐ விடு Sports-ஐ எடு” என மாரத்தான் ஓடினால், அவரது கட்சிக்காரர்களோ “முதலமைச்சர் சொல்வதை விடு, Drugs-ஐ எடு” என்று செயல்படுவதாக விமர்சித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in