LATEST NEWS
அதிமுகவில் மீண்டும் OPS,சசிகலா..? வேலுமணி போட்ட புது ஸ்கெட்ச்… அதிர்ச்சியில் எடப்பாடி..!!
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிமுகவை விட்டுப் பிரிந்து சென்ற சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் சேர்த்து, தற்போது திமுக எம்.எல்.ஏவாக உள்ள தனது அண்ணன் ஓ.பன்னீர்செல்வமும் மீண்டும் அதிமுகவிற்கு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கடந்த 31 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்ட வலிமையான இயக்கமான அதிமுகவை யாராலும் எதுவும் செய்துவிட முடியாது என்றும் அவர் உறுதியுடன் கூறியுள்ளார்.
கட்சியின் தற்போதைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது தான் முழு நம்பிக்கை வைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பிரிந்து சென்ற தலைவர்கள் அனைவரையும் ஈபிஎஸ் ஒன்றிணைத்து வழிநடத்துவார் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். கட்சியின் ஒற்றுமையே அதன் பலம் என்பதை வலியுறுத்தும் வகையில் அவரது இந்த அறிக்கை அமைந்துள்ளது.
வேலுமணியின் இந்த கருத்து, அதிமுகவின் உட்கட்சி விவகாரங்கள் மற்றும் பிரிந்து சென்ற முக்கிய தலைவர்களை மீண்டும் இணைப்பது குறித்த அரசியல் விவாதங்களை மீண்டும் சலசலக்க வைத்துள்ளது. குறிப்பாக, திமுகவில் இருக்கும் ஓபிஎஸ் உள்ளிட்டோரை மீண்டும் தாய்க்கழகத்திற்கு அழைப்பது கட்சியின் அடுத்தகட்ட நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
