CRIME
“ஓயோ விடுதியில் பயங்கரம்..” அறையில் சடலமாகக் கிடந்த இளம்பெண்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்..!!
ஹைதராபாத் எஸ்.ஆர். நகரில் உள்ள ‘கோகுல் பிரைட்’ ஓயோ விடுதியில், இளம்பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதியின் அறை எண் 103-ல் சி. கணேஷ் என்ற இளைஞருடன் அந்த இளம்பெண் தங்கியிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மறுநாள் காலை அந்த அறையில் இளம்பெண் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவருடன் தங்கியிருந்த இளைஞர் தலைமறைவாகியுள்ளார்.
மரணமடைந்த பெண்ணின் ஆதார் அட்டையில் அவரது பெயர் ‘துர்கா’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கடந்த காலத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றபோது அவர் ‘சிரீஷா’ என்ற பெயரில் பதிவு செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. குடும்பத் தகராறு காரணமாகக் கணவர் தாக்கியதால் அவர் ஏற்கனவே மருத்துவமனைக்குச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது காவல்துறையினர் விடுதியின் சிசிடிவி காட்சிகளையும், தங்கும் பதிவேடுகளையும் தீவிரமாக ஆய்வு செய்து, இந்த சந்தேக மரணத்திற்கான உண்மையான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
