LATEST NEWS
“என் பேரனை பார்க்க முடியலையே..” முதலமைச்சர் விஜய்க்காக ஏங்கிய ‘மெர்சல்’ சிட்டுக்குருவி பாட்டி.. வைரல் வீடியோ..!!
தமிழ்நாடு முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், மதுரையில் நடைபெற்ற ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ வழங்கும் திட்டம் மற்றும் காந்தி அருங்காட்சியகத் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் நேற்று நேரில் கலந்துகொண்டார். அத்துடன் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார். இந்த நிலையில், விஜய்யுடன் ‘மெர்சல்’ திரைப்படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் ரசிகர்களால் ‘சிட்டுக்குருவி பாட்டி’ என்று அன்போடு அழைக்கப்படும் மதுரையைச் சேர்ந்த மூத்த துணை நடிகை சீனியம்மாள், விஜய்யை நேரில் சந்திக்க முடியாமல் போனது குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார்.
https://www.instagram.com/reel/Dd3sKASTAr-/?utm_source=ig_web_button_share_sheet
தனது சொந்த ஊரான மதுரைக்கு விஜய் வந்திருப்பதை அறிந்து அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற விரும்பியதாகக் கூறியுள்ள சீனியம்மாள், கூட்ட நெரிசல் காரணமாக அவரைப் பார்க்க இயலவில்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும், “என் பேரன் விஜய் மதுரைக்கு வந்து குழந்தைகளுக்குத் தாய்மாமனாக தங்க மோதிரம் போட்டது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது; அடுத்த முறை அவர் மதுரைக்கு வரும்போது கண்டிப்பாக என் பேரனை நேரில் சந்திப்பேன்” என்று அவர் பாசத்துடன் நெகிழ்ச்சியாகப் பேசியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
