‘அப்போ ₹15 கோடி ஊழலா..?’ ஆதவ் அர்ஜுனா பேச்சால் மரகதம் குமரவேலுக்கு வந்த பெரிய சிக்கல்… நயினார் நாகேந்திரன் அதிரடி கேள்வி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘அப்போ ₹15 கோடி ஊழலா..?’ ஆதவ் அர்ஜுனா பேச்சால் மரகதம் குமரவேலுக்கு வந்த பெரிய சிக்கல்… நயினார் நாகேந்திரன் அதிரடி கேள்வி..!!

Published

on

மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்துக்கள், தற்போது தவெக வேட்பாளருக்கே எதிராகத் திரும்பியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மதுராந்தகத்தில் கடந்த 5 ஆண்டுகளாகச் சாலை மற்றும் குடிநீர் உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்யப்படாமல் போலி கணக்கு காட்டப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், அவர் விமர்சித்த அதே 5 ஆண்டு காலகட்டத்தில் அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக (MLA) இருந்தவர், தற்போதைய தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் என்பதால் இக்கருத்து பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

ஆதவ் அர்ஜுனாவின் இந்த விமர்சனத்தை முன்வைத்து பாஜக் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தவெகவுக்கு எதிராகக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். “கடந்த 5 ஆண்டுகளில் மதுராந்தகம் தொகுதிக்குச் சட்டமன்ற உறுப்பினர் நிதியாக ஒதுக்கப்பட்ட ₹15 கோடி என்னவானது? அப்படியென்றால் அந்த ₹15 கோடியை மரகதம் குமரவேல் ஊழல் செய்துவிட்டாரா?” என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தவெக இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

சமூக வலைத்தளங்களில் ஆதவ் அர்ஜுனா பிரசாரத்தில் பேசிய இந்த வீடியோ தற்பொழுது மிக வேகமாக வைரலாகி வருகிறது. தொகுதி மேம்பாட்டு நிதியைப் பற்றித் தெரியாமல், தங்கள் சொந்தக் கட்சியின் வேட்பாளரையே தவெகவினர் பொதுமேடையில் மறைமுகமாகத் தாக்கிப் பேசியிருப்பது அரசியல் முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது எனப் பலரும் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் மதுராந்தகம் இடைத்தேர்தல் களம் மற்றும் தவெக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in