செம மாஸ்…! காரின் கூரையில் 40 கி.மீ மரண சேஸிங்… உயிரைப் பணயம் வைத்து குற்றவாளிகளைப் பிடித்த காவலரை நேர்ல கூப்பிட்டு பாராட்டிய முதல்வர் விஜய்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

செம மாஸ்…! காரின் கூரையில் 40 கி.மீ மரண சேஸிங்… உயிரைப் பணயம் வைத்து குற்றவாளிகளைப் பிடித்த காவலரை நேர்ல கூப்பிட்டு பாராட்டிய முதல்வர் விஜய்..!!

Published

on

கோவை மாவட்டம், விளாங்குறிச்சி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது ஒரு கார் நிற்காமல் சென்றது. அந்த காரின் மேற்கூரை மீது கோவில்பாளையம் காவல் நிலையத்தின் தலைமை காவலர் வேல்முருகன் ஏறிக்கொண்டார். காரின் மேற்கூரையில் காவலர் இருப்பது தெரிந்தும் கடத்தல் காரர்கள் விளாங்குறிச்சியில் இருந்து அவிநாசி சுமார் 40 கி.மீ வரை காரை ஓட்டிச் சென்றனர்.

பின்னர் அந்த காரை மடக்கிப்பிடித்த காவலர்கள் காரிலிருந்து சுமார் 233 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். அதிலிருந்த 3 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் உயிரை பணயம் வைத்து திருடர்களை பிடித்த கோவில்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் வேல்முருகனை முதல் – அமைச்சர் விஜய் இன்று நேரில் அழைத்து பாராட்டினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in