FLASH: EX அமைச்சர் எ.வ.வேலு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு.. அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

FLASH: EX அமைச்சர் எ.வ.வேலு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு.. அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு..!!

Published

on

திருவண்ணாமலை மலப்பம்பாடி ஏரியில் சட்டவிரோதமாக மண் அள்ளப்பட்டு, அரசுக்கு சுமார் 8.22 கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மகன் எ.வ.குமரன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். திமுக மண்டல மாநாட்டுக்காக மலப்பம்பாடி ஏரியிலிருந்து அனுமதியின்றி விதிகளை மீறி அதிக ஆழத்திற்கு மண் திருடப்பட்டு, அதை மாநாட்டு அரங்கம் அமைக்கப்பட்ட எ.வ.வேலுவின் மகன் குமரனுக்குச் சொந்தமான தனியார் நிலத்தை சமன்படுத்தப் பயன்படுத்தியதாக ‘அறப்போர் இயக்கம்’ அளித்த புகாரின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏரி மண் முறைகேடு மற்றும் முறையற்ற சட்டவிரோத மண் கடத்தல் தொடர்பாக எழுந்துள்ள இந்த விவகாரம், தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்புதான் இந்த விவகாரத்தில் தொடர்புடைய திமுக எம்பி சி.என்.அண்ணாதுரை வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியிருந்த நிலையில், தற்போது முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மகன் மீது எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது திமுக தரப்பிற்கு பெரும் பின்னடைவாகவும், அரசுக்கு ஏற்பட்ட நிதி இழப்பை மீட்பதற்கான லஞ்ச ஒழிப்புத்துறையின் அடுத்தகட்ட தீவிர நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in