அப்ப மட்டும் எப்படி விபத்து நடந்துச்சு..? யாருடைய சூழ்ச்சின்னு இப்போது புரிகிறதா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு குற்றச்சாட்டு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அப்ப மட்டும் எப்படி விபத்து நடந்துச்சு..? யாருடைய சூழ்ச்சின்னு இப்போது புரிகிறதா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு குற்றச்சாட்டு..!!

Published

on

முந்தைய திமுக ஆட்சியின் போது நிகழ்ந்த கரூர் துயர சம்பவத்தின் பின்னணியில் திட்டமிட்ட சதி மற்றும் சூழ்ச்சி ஒளிந்திருந்ததாகத் தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், கடந்த ஆட்சிக் காலத்தில் இதே கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் கடுமையான கூட்ட நெரிசல் மற்றும் விபத்து ஏற்பட்டுப் பெரும் துயரம் நிகழ்ந்ததைச் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், அண்மையில் முதலமைச்சர் விஜய் அவர்கள் அதே கரூரின் குறிப்பிட்ட சாலையில் சுமார் 12 கிலோமீட்டர் தூரத்திற்குப் பிரம்மாண்ட ரோடு ஷோ நடத்தியதை நினைவு கூர்ந்தார். அந்தச் சமயத்தில் யாருக்கும் எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை, பைக் விபத்துகளோ அசம்பாவிதங்களோ நிகழவில்லை எனக் குறிப்பிட்ட அவர், ஏன் முந்தைய திமுக ஆட்சியின் போது மட்டும் அப்படி ஒரு விபத்து அரங்கேறியது? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். இதன் மூலம் அந்தப் பழைய விபத்தின் பின்னணியில் யாருடைய சூழ்ச்சி இருந்தது என்பது இப்போது மக்களுக்குத் தெளிவாகப் புரிகிறது என்றும் அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in