LATEST NEWS
BREAKING: முன்னாள் காவல் ஆணையர் அருண் IPS காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.. தமிழகத்தில் பரபரப்பு..!!
தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான பாலியல் புகார் விவகாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஏ. அருண் ஐபிஎஸ் (A. Arun IPS) மற்றும் கோவை காவல் ஆணையர் கண்ணன் ஐபிஎஸ் ஆகியோர் அதிரடியாகக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். வீரமணி மீது பாலியல் புகார் அளிக்கப்பட்ட காலகட்டத்தில் சென்னை காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தின் தொடர்ச்சியாக, கோவை காவல் ஆணையராகப் பதவி வகித்து வந்த கண்ணன் ஐபிஎஸ்-ம் தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் பாலியல் வன்கொடுமை, கட்டப்பஞ்சாயத்து, மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்து, விசாரணையின் நகர்வுகள் தீவிரமடைந்து வருகின்றன. இத்தகைய பரபரப்பான அரசியல் மற்றும் சட்டச் சூழலில், தமிழகக் காவல்துறை வட்டாரத்தின் முக்கிய உயர் அதிகாரிகள் இருவர் ஒரே நேரத்தில் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை காவல்துறையினர் மற்றும் அரசியல் வட்டாரங்களில் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது.
