LATEST NEWS
“மன்னிப்பு கேட்கும் வரை விடமாட்டோம்” அமைச்சர் மரியவில்சனுக்கு வந்த புதிய சிக்கல்… நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை..!!
“என் மதம் கற்றுத் தந்ததை எத்தனை தமிழ் படித்தாலும் தெரிந்துகொள்ள முடியாது” எனச் சட்டமன்றத்தில் அமைச்சர் மரியவில்சன் பேசிய பேச்சுக்கு, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். தமிழ்நாட்டின் சட்டமன்றப் பேரவையில் அமைச்சர் பேசிய இந்தச் சொற்கள் தற்பொழுது பெரும் அரசியல் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பிறப்பால் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் உணர்வால் நாம் அனைவரும் தமிழர்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளார். உணர்ச்சி மிகுதியில் தாய்மொழியான தமிழ் மொழியைக் குறைத்து மதிப்பிடும் வகையிலும், இழிவுபடுத்தும் வகையிலும் அமைச்சர் மரியவில்சன் பேசியிருப்பது சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என அவர் சாடியுள்ளார்.
தமிழ் மொழியின் தொன்மையையும் பெருமையையும் சட்டமன்றத்திலேயே குறைத்து மதிப்பிட்டதற்காக, அமைச்சர் மரியவில்சன் உடனடியாகத் தமிழ் மக்களிடமும் அவையிலும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் புதிய சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், சமூக வலைதளங்களிலும் இது குறித்த விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.
