LATEST NEWS
“குறிவைத்தால் தவறமாட்டேன், தவறுமானால் குறிவைக்க மாட்டேன்” எம்.ஜி.ஆர் ஃபார்முலா… விஜய் ஸ்டைல்.. சட்டப்பேரவையை அதிரவைத்த அமைச்சர் பேச்சு..!!
தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் மரியா வில்சன், எம்.ஜி.ஆரின் புகழ்பெற்ற “நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி” என்ற பாடலின் வரிகளைக் குறிப்பிட்டு தமிழக முதல்வர் விஜய்யைப் பாராட்டிப் பேசினார். இந்தப் பாடலின் வரிகளை அவர் பேரவையில் பாடியபோது, “தலைவனாகலாம்” என்ற குறிப்பிட்ட வரி வரும்போது முதல்வர் விஜய்யை நோக்கித் தன் கைகளைக் காட்டினார். இது அவையில் இருந்தோரின் கவனத்தை ஈர்த்தது.
இதற்கு முன்னதாகப் பேசிய அமைச்சர் மரியா வில்சன், எம்.ஜி.ஆரின் மற்றொரு மாஸான வசனத்தையும் சுட்டிக்காட்டினார். “குறிவைத்தால் தவறமாட்டேன், தவறுமானால் குறிவைக்க மாட்டேன்” என்ற எம்.ஜி.ஆரின் அரசியல் மற்றும் திரை உலக தாரக மந்திரத்தை அவர் நினைவு கூர்ந்தார்.
இந்தத் தத்துவப் பொன்மொழியைத் தனது நிஜ வாழ்க்கையிலும், அரசியல்ப் பயணத்திலும் அப்படியே செய்து காட்டியவர் முதல்வர் விஜய் தான் என்று அமைச்சர் மரியா வில்சன் தனது உரையில் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். அமைச்சரின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது.
