LATEST NEWS
அதிமுகவுக்கு அடுத்தடுத்த ஷாக்… கட்சியில் சேர்ந்த 1 மணிநேரத்தில் 15 பேருக்கு முக்கியப் பதவி.. விஜய் போட்ட மாஸ் ஸ்கெட்ச்..!!
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய், கட்சிக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் 15 பேரை புதிய துணைப் பொதுச்செயலாளர்களாக நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கட்சியில் இணைந்த ஒரு மணி நேரத்திற்குள் இந்த முக்கியப் பொறுப்புகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதில் 11 பேர் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஆவர். அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முக்கியப் பிரமுகர்களான கடம்பூர் ராஜு, வெல்லமண்டி நடராஜன், M.S.M. ஆனந்தன், வைகைச்செல்வன், வளர்மதி, எம்.சி. சம்பத், கே. ராதாகிருஷ்ணன், கே.வி. ராமலிங்கம், கே.டி. பச்சைமால், என்.ஆர். சிவபதி, எம். ஆனந்தன் ஆகிய 11 முன்னாள் அமைச்சர்களுக்கும், சந்தீப் ஆனந்த், முத்து வெங்கடேஸ்வரன், தொள்ளமூர் கண்ணன், குமரன் ஆகிய 4 பேருக்கும் என மொத்தம் 15 பேருக்குத் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், கட்சி அமைப்பை விரிவாக்கம் செய்யும் வகையில் முன்னாள் எம்.பி. சி. மகேந்திரன் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதியை உள்ளடக்கிய திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டக் கழகம் உருவாக்கப்பட்டு அதற்கு மாவட்ட கழகச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்த நிர்வாகிகள் அனைவரும் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த்தின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் செயல்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
