“என்னோட நிர்வாண படங்களை லீக் பண்ணுறாரு” கருப்பு முருகானந்தத்தால் பாதிக்கப்பப்ட்ட பெண் மீண்டும் பரபரப்பு புகார்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என்னோட நிர்வாண படங்களை லீக் பண்ணுறாரு” கருப்பு முருகானந்தத்தால் பாதிக்கப்பப்ட்ட பெண் மீண்டும் பரபரப்பு புகார்..!!

Published

on

பாஜக தமிழக மாநில பொதுச்செயலாளராக இருந்த கருப்பு முருகானந்தம் மீது, அக்கட்சியின் ஓபிசி அணியைச் சேர்ந்த திருச்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகியான திவ்யா சேஷாத்ரி என்பவர் பரபரப்பான பாலியல் புகார் ஒன்றை அளித்துள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதுடன், பெங்களூரு, டெல்லி போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், கட்டாயக் கருக்கலைப்பில் ஈடுபடுத்தியதாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி நம்ப வைத்ததாகவும் அப்பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பெண் தனது சொத்துக்களை முருகானந்தம் ஏமாற்றி எழுதி வாங்கியதாகவும், தற்போது தனது தனிப்பட்ட ஆவணங்கள், நிர்வாணப் படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பரப்பி வருவதாகவும் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று கூடுதல் மனு ஒன்றை அளித்துள்ளார். மேலும், தனக்கும் தனது குழந்தைகளுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதால், தங்களுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

இப்புகார் தொடர்பாக, கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, கருப்பு முருகானந்தத்தை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விடுவித்து மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதே வேளையில், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என்றும், ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியாக உருவாக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து தன் மீது பழி சுமத்தியுள்ளதாகவும், இதற்கு எதிராக சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் கருப்பு முருகானந்தம் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in