“நான் காதலனுடன் தான் வாழுவேன்..” கண்ணீருடன் கெஞ்சியும் கேட்காத தாய்.. ஆத்திரத்தின் எல்லைக்கே சென்று மகன் செய்த கொடூரம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“நான் காதலனுடன் தான் வாழுவேன்..” கண்ணீருடன் கெஞ்சியும் கேட்காத தாய்.. ஆத்திரத்தின் எல்லைக்கே சென்று மகன் செய்த கொடூரம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

தெலுங்கானா மாநிலம் ஹனுமகொண்டா மாவட்டம் காஜிபேட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலாஜி நகரில், தாயின் கள்ளக்காதல் விவகாரத்தால் ஆத்திரமடைந்த சொந்த மகனே பெற்ற தாயின் தொண்டையை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சுதாகர் என்பவரைத் திருமணம் செய்த உதயஸ்ரீ என்ற பெண்ணுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கணவர் தனியார் நிறுவனத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வர, உதயஸ்ரீ இல்லத்தரசியாக இருந்துள்ளார். இதனிடையே, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான ஒரு நபருடன் உதயஸ்ரீக்குத் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இந்த கள்ளக்காதல் விவராம் எல்லை மீறியதால், தன் கள்ளக்காதலனுடன் தனியாகக் குடும்பம் நடத்த உதயஸ்ரீ முடிவெடுத்துள்ளார்.

தனது தாயின் இந்தத் தவறான முடிவு குறித்து அறிந்த மகன் துரைபாபு, உதயஸ்ரீயை படுக்கையறைக்கு அழைத்துச் சென்று இந்தத் தகாத உறவை உடனடியாகக் கைவிடுமாறு பலமுறை கண்ணீருடன் கெஞ்சிக் கேட்டுள்ளார். ஆனால், அதற்கு உதயஸ்ரீ சற்றும் மதிக்காமல் திமிராகவும் ஆக்ரோஷமாகவும் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தின் எல்லைக்கே சென்ற துரைபாபு, வீட்டில் இருந்த கத்தியை எடுத்துப் பெற்ற தாயின் தொண்டையை அறுத்திக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டுச் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடினார். இக்கொடூரக் கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காஜிபேட் போலீஸார், தப்பியோடிய மகன் துரைபாபுவை வளைத்துப் பிடிக்கத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in