LATEST NEWS
“ரோடு என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா..?” மரண பயம் காட்டிய தனியார் பேருந்துகள்.. கொதித்தெழுந்த நெட்டிசன்கள்.. அதிரடியாகப் பாய்ந்த போலீஸ் ஆக்ஷன்..!!!
கேரளா மாநிலம் கொச்சி மாநகரக் காவல்துறையினர், ‘அலினா’ மற்றும் ‘ஷாலிவா’ ஆகிய தனியார் பேருந்துகளின் ஓட்டுநர்கள் ஆபத்தான முறையில் வாகனங்களை இயக்கியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பேருந்து நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் நடத்துநர்கள் மீது அதிரடி சட்ட நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர். சாலையில் சென்ற பிற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், இந்த இரண்டு பேருந்துகளும் போட்டிப் போட்டுக் கொண்டு அராஜகமாக இயக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து இந்த ஆக்ஷன் எடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கொச்சி போக்குவரத்துத் துறை மற்றும் காவல்துறையினர், விசாரணைக்காக இரு பேருந்துகளின் உரிமையாளர்களையும் உடனடியாகக் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகுமாறு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும், பொதுச் சாலைகளில் விதிமுறைகளை மீறி அநாகரிகமான முறையில் அதிவேகமாகப் பேருந்துகளை இயக்கி விபரீதத்தை ஏற்படுத்த முயன்ற குற்றத்திற்காக, அந்த இரண்டு பேருந்துகளின் ‘முறையான அனுமதிப் பத்திரங்களை’ நிரந்தரமாக ரத்து செய்வதற்கான தீவிர ஆலோசனைகளிலும் மோட்டார் வாகனத் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
