LATEST NEWS
“ஜெயித்தாலும் தோற்றாலும் ஸ்டாலின் என் ஸ்வீட் அங்கிள்..!” மேடையில் ஆச்சரிய திருப்பம் கொடுத்த விஜய்..!!
மதுராந்தகம் இடைத்தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், “நான் முதலமைச்சராக இங்கு வரவில்லை. இடைத்தேர்தலுக்கு ஓட்டு கேட்டு வந்திருக்கிறேன். எப்பவும் போல உங்க வீட்டு பிள்ளையா, உங்க வீட்டு மகனா, உங்க வீட்டு தம்பியா வந்திருக்கிறேன்.விசில் சின்னத்திற்கு ஓட்டு போடுங்க… ஏன் உங்க விஜய் ஆட்சிக்கு வரக்கூடாதா? பாஜகவின் கிளை கழகமாக இருந்த அதிமுக தற்பொழுது திமுகவின் கிளைக் கழகமாக மாறிவிட்டது. வரலாறு எடுத்து படித்தால்திமுகவின் வண்டவாளம், தண்டவாளம் தெரியப்போகிறது. ஊழல் செய்த கூட்டத்தை விடவே மாட்டோம் என்று மு.க.ஸ்டாலினுக்கு சொல்லி கொள்கிறேன். ஊழலே செய்ய மாட்டோம் என்று திமுகவினால் சொல்ல முடியுமா? திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டி. மு.க.ஸ்டாலின் தோற்றாலும் ஜெயித்தாலும் அவர் எனது அங்கிள் எனது ஸ்வீட் அங்கிள்…. நீங்கள் கட்டிய பாலம் என்கிறீர்களே… உங்கள் பணத்தில் நீங்கள் பாலம் கட்டினீர்களா?
திமுக, அதிமுகவுக்கு வாக்களிப்பது, பெண்களுக்கு ஆபாசமாக பேசுபவர்களை ஊக்குவிப்பதாகிவிடும். அந்த மற்றும் பலர் பாஜகவின் ஒரு கிளையாக இருந்து, இப்போது திமுகவின் ஒரு கிளையாக மாறிவிட்டார்கள். விஜய் ஆட்சிக்கு வந்துவிட்டால், ஊழல் செய்ய முடியாது, தொட்டால் மாட்டிவிடுவோம் என மாறி மாறி இருவரும் திட்டம் போட்டார்கள்.
திமுகவிற்கு மறைமுகமாக மற்றும் பலர் உதவுகிறார்கள். மற்றும் பலர் யார் தெரியுமா? அதிமுக தான். ஜெ., பற்றி தவறாக பேசியவர்களுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முயன்றவர்களின் முகமூடி கிழிந்தது தெரியாமல் கூவிக் கொண்டிருக்கிறார்கள். யார் என்ன கூவினாலும், நம்ம ரூட் ஸ்ட்ரைட் ரூட் தான். ஊழல், லஞ்சத்தை ஒழிக்க விஜய் ஆட்சிக்கு வரக்கூடாதா? பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க விஜய் ஆட்சிக்கு வரக்கூடாதா? தீயசக்தி திமுக தினந்தோறும் தவெக குறித்து அசிங்கமாக, ஆபாசமாக பேசி வருகிறது” என்றார்.
