LATEST NEWS
BREAKING : கோவை கல்லூரி மாணவன் அமுதன் கொலை வழக்கில் 17 வயது மாணவர் உட்பட 5 பேர் கைது…!!
கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவன் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த கொடூரக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் சில குற்றவாளிகளைப் பிடிப்பதற்காகக் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர வலைவீசித் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடந்து வரும் வேளையில், தலைமறைவாக உள்ள மற்ற நபர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
