“நடுங்க வைக்கும் கொடூரம்..” கொதிக்கும் திரவத்தில் விழுந்து துடிதுடித்த தொழிலாளி.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நடுங்க வைக்கும் கொடூரம்..” கொதிக்கும் திரவத்தில் விழுந்து துடிதுடித்த தொழிலாளி.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!

Published

on

கர்நாடக மாநிலம் ஷிவமோகா நகரின் புறநகர்ப் பகுதியான வோடினகொப்பாவில், கொதிக்கும் பாக்குத் தண்ணீருக்குள் தவறி விழுந்த ஜேனு குமார் என்ற தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தனது வீட்டின் அருகே உள்ள பாக்கு பதப்படுத்தும் ஆலையில் வேலை செய்து வந்த ஜேனு குமார், கடந்த செப்டம்பர் 8 அன்று பாக்குகளைக் வேகவைத்து எடுத்த பிறகு, தொட்டியின் எஞ்சிய கழிவுகளைச் சுத்தம் செய்ய முயன்றுள்ளார். அப்போது துரதிர்ஷ்டவசமாகத் தனது சமநிலையை இழந்து, கொதித்துக் கொண்டிருந்த பாக்குத் திரவத் தொட்டிக்குள் நேரடியாகத் தவறி விழுந்துள்ளார். இந்த நெஞ்சை உலுக்கும் விபத்தின் ஒட்டுமொத்தக் காட்சியும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

விபத்து நடந்தவுடன் அருகில் இருந்த சக ஊழியர்கள் மூவர் ஓடிவந்து, அவரைத் தொட்டியிலிருந்து வெளியே இழுத்துள்ளனர். கொதிக்கும் திரவத்தால் உடல் முழுவதும் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டதால், பயந்துபோன ஜேனு குமார் பதற்றத்தில் ஆடைகளைக் கழற்றிவிட்டு அலறியுள்ளார். உடனடியாக அவர் ஷிவமோகாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக மணிப்பால் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு வந்தார். எனினும், கடுமையான தீக்காயங்கள் காரணமாகச் சிகிச்சை பலனின்றி கடந்த புதன்கிழமை இரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த ஜேனு குமாருக்கு மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இச்சம்பவம் குறித்து துங்கா நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in